இதய பரிசு - idhaya parisu

அவன் இதயத்தை கானவில்லை
தொலைத்த பொருளை தேடலாம்
ஆனால் அவளுக்கு பரிசாக கொடுத்த இதயத்தை என் தேட வேண்டும்Please Post Your Comment

தேடல் - thedal

அழகு தேவதை அவள் இதழ்களால் தரும் அமுதம் இல்லாமல்
இன்று
கண்கள் மூடி கவிதை தேரில் ஏறி அவள் இதழ் தேடும் பயணம்
 

Please Post Your Comment

தெரியாது - theriyathu

உதிரம் ஓடும் வேகம் தெரியாது
உயிர் வாழ நான் சுவாசித்த காற்றின் அளவும் தெரியாது
உன் மீது கொண்ட காதலின் அளவும் நிச்சயம் எனக்கு தெரியாது

Please Post Your Comment

நிழல்-nilal

இரவினில் நிழல் தேறிவதில்லை
ஆம் நான் உன் நிழல் ஆகிவிட்டேன்

எறியும் விளக்கு தூங்குவதில்லை
ஆம் அவள் மீது கொண்ட காதலால்


Please Post Your Comment

உதிரம் - uthiram


உதடுகள் உறங்கும் வரை உன் பெயர் சொன்னேன்
உதிரம் ஓடும் இதயத்தால் நீ மட்டும் வேண்டும் என்று கேட்க துணிந்தேன்Please Post Your Comment

சாட்சி- satchi

உன் பேட்சை கேட்ட நாள் முதல் 
இவன் இதயம் உமை ஆச்சு 
இவன் கனவில் அடிக்கடி பார்க்கிறான் இவள் முகம்
அது தான் சாட்சி

Please Post Your Comment

அவள் நினைவு - aval ninaivu

காதல் வேண்டாம் அவள் கண் பார்வை இல்லாமல் 
ஒரு இரவும் வேண்டாம் அவள் இதழ் முத்தம் இல்லாமல் 

உறங்கும் இவன் நினைவுகள் உன்னை மறந்து போக துடிக்கிறது 
துடிக்கும் இவன் இதயம் இவள காதலை நினைத்து துடிக்கிறது 

Please Post Your Comment

அறுவை சிகிச்சை - aruvai sikichchai


காதல் என்னும் விபத்தால்,
இன்று இவன் இதயத்தில் அறுவை சிகிச்சை
உயிர் போனாலும் இவள் நினைவுகளுடன்
வாழும் இவன் இதயம்

Please Post Your Comment

நேரம்-neram


புதியவள் இவள் எனக்காய் பூத்திருந்த நேரம்
நடுநிசி இரவில் நிலவின் ஒற்றை விழியும்
இவனின் இரட்டை விழியும் தூங்க மறுத்த நேரம்
கவிதை எழுதி கலைத்தலும்
இவளின் காதலில் எப்போதும் உடைய கனவுகள் கொண்ட நேரம்
ஓடும் குருதி நின்றாலும்
ஓடும் இவள் நினைவுகள் உறங்கா நேரம்
போர்வை போத்தி படுத்தாலும்
இதய சுவர் ஏறி எட்டி பார்க்கும் காதல் திருடன் வரும் நேரம்
அவளுடன் கனவில் இருந்தான் இவன்.

Please Post Your Comment

திருடன்

பொக்கிசமாக இருக்கும் உன் இதயம் கேட்பேன் ,
கேட்டு பெற்றால் அது பரிசு ஆனால் நான் "திருடன்"

Please Post Your Comment

விபத்து - vipaththu

காதல் என்னும் விபத்தால்
இன்று இவன் இதயத்தில் அறுவை சிகிச்சை,
உயிர் போனாலும் இவள் நினைவுகளுடன் 
வாழும் இவன் இதயம் 
மீண்டும் விபத்துக்களை சந்திக்க

Please Post Your Comment

பயணம் - payanam

விழிகளில் இவளை சிறைபிடித்தான் 
அந்த குற்றத்திற்கு தான் 
இன்று காதல் என்னும் கானகத்தில் 
அவள் நினைவுகள் என்னும் 
பேருந்தில் ஏறி ஒரு முடிவில்லா பயணம்

Please Post Your Comment

அவள் முகம் - aval mugam


கடிகார முள் எல்லாம் இவனை களவாடி கொண்டது
சின்ன புன்னகை கேட்கும் இடம் எல்லாம் திரும்பி பார்க்க தோன்றியது

செல்போன் குறுஞ்செய்திகள் மட்டும்
கொள்ளை கொள்ளையாய் தீர்ந்து போனது
இரவு வரும் நேரம்தனை நெஞ்சம் ஏங்கி கேட்க தொடங்கியது

இதயம் இவள் வரவேண்டும் என்று அவனை இடிக்க தொடங்கியது
தூரத்தில் வருவது அவளாகவே இருக்க மனம் வேண்டி கொண்டது

ஆமாம், வரும் வழியில் பார்த்த முகம் அல்ல
இவன் வாழ்க்கையில் பார்த்து விட்ட வரம் அவள் முகம்

தூரத்தில் அவள் முகம் இல்லை
அவள் புன்னகை சொல்லும் வாசம்

"அவள் தான்".
முடிவு "சந்தோசம்"
Loading the player...

Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

Please Post Your Comment

காதல் பசை - kaathal pasai

ஒற்றை புன்னகையால் உதிர்ந்து விட்ட இதயம் 
ஓட்ட வைக்க காதல் பசை வேண்டும் 

உறங்காத இரவுகள் தொடர்ந்திட
உன் வாய்மொழி வேண்டும் 

பொய்கள் இன்னும் சொல்ல
நாம் அடிக்கடி  சண்டை இட்டு கொள்ள வேண்டும் 

இவன் செல்போன் ஓயாது இருக்க 
எப்போதும் உன் குரல் கேட்க வேண்டும் 

இவன் வாழ்வின் முடிவே ஆகினும் 
அது இவள கைகளால் முடிந்திட வேண்டும்  

Please Post Your Comment

நம்பிக்கை முத்தம் - nambikkai muththam

தள்ளாடும் வயதில் 
தான் தனி மரம் 
ஆகிவிடும் சூழலில்

தோல் கொடுக்கும் மகனின் 
உட்சன் தலையில்
உறுதி குறையாமல் 
உண்மை தனியாமல்

தாய்  கொடுத்தால்
"நம்பிக்கை முத்தம்"
Loading the player...

Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Please Post Your Comment

வேண்டுதல் முத்தம் - venduthal muththam

நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் 
நிம்மதி வாழ்வு வாழ வேண்டும் 
உலகம் இவனை மட்டும் பார்க்க வேண்டும் 
என்று எல்லாம் வேண்டி 
கடவுளை பார்த்து தந்தான் 
"வேண்டுதல் முத்தம்"

Please Post Your Comment

ஈர முத்தம் - muththam

காதலனை எண்ணி அவன் கைசேர காத்திருக்கும் 
காகிதத்திற்கு தந்தாள் 
"ஈர முத்தம்"


Please Post Your Comment

எது வரை - ethu varai

மல்லிகை வாசம் அது வாடும் வரை 
கவிதை வாழ்வு  அதை ரசிக்கும் வரை 
இரவின் வாழ்வு அது விடியும் வரை 
நிலவின் வாழ்வு அது தேயும் வரை 
அவள் நினைவின் வாழ்வு அது 
அவன் மண்ணில் புதைவும் வரை 
Loading the player...

Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Please Post Your Comment

பூங்கா - poonga

பூங்காவில் பூக்கள் எல்லாம் மலர்ந்து நின்று இருக்கும் 
என்று எண்ணி தேன் எடுக்கும் தேனிக்கள்
இன்று குழம்பி நின்றதாம் 
பூ அவள் பூங்காவில் "நடைப்பயிற்சி" செய்த காரணத்தால் 

Loading the player...

Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Please Post Your Comment

ஓட்டம் - ottam

காதல் பயணத்தில் தொடர்ந்து வரும் நிலவாக
அவள் நியாபகங்கள் 
நிலவு அதனை ரசிக்கின்றான் 
அவள் நியாபகன்களால் துடிக்கின்றான் 
அவள் புன்னகைக்கும் முகம் 
பார்த்த பின் தான் அவன் இதயத்தில் ரத்த ஓட்டம் 
அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம் 
அவன் கால்கள் தானே எடுக்கும் ஓட்டம்
Loading the player...

Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Please Post Your Comment

கனவு - kanavu

அவள் கை பிடித்த நாள் 
நான் கால் பதித்த முதல் இடம் 
"நிலவு" [அவள் மனது]

கவிதை இல்லை 
கனவுகள் மட்டும் 
அவளை பார்த்த
அந்த நாள் முதல் 

வானவில் வண்ணங்கள்
மறைந்து போகும்
பெண்ணே உன் புன்னகை 
என்னில் புதைந்து 
போகும்

Please Post Your Comment

சொந்தக்காரன் -sonthakkaran

தனிமை அவனை தத்து எடுத்து கொண்டதால்
காதலுக்கு இன்று அவன் சொந்தக்காரன் 

அவன் மீசைக்கு சொந்தக்காரி அவள் 
அவள் உதடுகளுக்கு சொந்தக்காரன் அவன்
Loading the player...

Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Please Post Your Comment

ஒரு இரவு - oru iravu

காதோடு அவள் செய்த குறும்பு 
"சத்தம் செய்யாதே முத்தம் செய்"

இமைகள் தூங்கிய போதும் அவன் இதயம் கேட்கும் 
"மீண்டும் ஒரு இரவு அவளுடன்"

அவன் இரவில் கேட்ட புது மெல்லிசை 
அவள் இதழ் "சிரிப்பு"

I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can
Loading the player...

Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

Please Post Your Comment

கன்னக்குழி சிரிப்பு- kannakkuli sirippu

இப்போதெல்லாம் அவன் இதய வங்கியில் சேமிப்பு அதிகம்,
சேமிப்பு அவள் சினுங்கல்கள்

சத்தம் இல்லாத இரவில் 
அவன் வெடித்த பட்டாசு "முத்தம்"

அவனுக்கு விழுந்த முதல் தாயம் 
"அவள் கன்னக்குழி சிரிப்பு"

Please Post Your Comment

காதலை சொல்லவில்லை-kathalai sollavillai

காதல் கொண்ட இதயம் சொல்லவில்லை,
பெளவுர்ணமி இரவில்
தூங்கா நிலவவும் சொல்லவில்லை,
கனவுகளுக்கு மட்டும்
சொந்தமான இந்த இரவும் சொல்லவில்லை,
இந்த கனவின் சொந்தக்காரன் "நினைவு" அவனும் சொல்லவில்லை,
நினைவில் எப்போதும்
நின்று கொண்டு இருக்கும் அவளும் சொல்லவில்லை 

"அவள் காதலை".

Please Post Your Comment

காதல் கோவில்-kaathal kovil

காதல் கோவிலில் கடவுளாக விற்றிருக்கும் அவள் 
அவன் கடவுளை தரிசிக்காத நாலும் இல்லை 
தரிசன் இல்லையென்றால் இரவில் தூங்குவதும் இல்லை

கடவுளை கண்டதும் மனதினில் பிரார்த்தனைகள்
செய்ய மறப்பதும் இல்லை 
கடவுளின் அழகை எப்போதும் ரசிக்காமல் இருந்ததும் இல்லை 

காதல் கொண்ட காரணத்தால் 
அவன் எப்போதும் கடவுளை எண்ணி கவிதை கோலங்கள்
போடா தவறியதும் இல்லை 

பக்தனின் கவிதை கோலங்கள் ரசித்தவள் 
பிரார்த்தனைகள் கண்டு சிரித்தவள்
அவன் பொறுமையை கொண்டு பூரித்தவள் 

இதய கருவறையில் இடம் தர மறுப்பது மட்டும் 
புரியாமல் , விடை தெரியாமல் , காரணங்கள் விளங்காமல் 
காத்திருக்கிறான் பக்தன் அவன்.

Please Post Your Comment

காதல் பாடல்-kathal paadal

அழுகின்ற குழந்தைக்கு அம்மாவின் தாலாட்டு பாடல்
கால் கடுக்க காத்திருந்து காதலி அழைக்கும் ரிங் டோன் தான் அவனுக்கு
தாலாட்டு பாடல்

களவி செய்தபின் நிறைந்து இருக்கும் அமைதி ஒரு பாடல்
கல்லூரியில் அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம் இவன் மனதில் கேட்கும்
சோக பாடல்

நடுநிசி இரவில் அவள் SMS கிடைத்தவுடன் அவன் மனதில் காதல் பாடல்
அவள் முகம் பார்க்க நாளை வரை காத்திருக்க வேண்டும் எனும் போது கேட்க
துனியும் "களவி பாடல்"

எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று காலையில் கேட்டான் பக்தி பாடல்
இதயத்தில் காதல் பாடல் படி அவளிடம் காதல் சொல்ல நடந்தான்.

இந்த நாள்
"பிப்ரவரி 14"

காதலர் தின வாழ்த்துக்கள் !!!

Please Post Your Comment

விடுதலை-viduthalai

அவள் கண் பார்வையில் பிடி பட்டேன் 
இன்று காதல் சிறையில் அகப்பட்டேன் 
காதல் கைதியாய் அவன் பெற்ற இன்ப தண்டனை 
"எப்போதும் அவள் நினைத்து கொண்டே இரு"
இந்த ஆயுள் தண்டனை முடிவதற்குள் அவள் இதயத்தை திருடி
முடித்த காரணத்தால் தண்டனை முடிந்து இன்று 
அவள் காதல் விடுதலை தரும் பெரும் நாள்

"பிப்ரவரி 14"

காதலர் தின வாழ்த்துக்கள் !!!


Please Post Your Comment

பிப்ரவரி 14- feb 14

feb 14
அவள் இதயத்துடன் காதல் தேர்வு எழுதும் நாள்
அவள் ஒற்றை இதயத்திற்கு மட்டும் ஓட்டுப்போட்டு
ஜெய்து விடுவோமா என்று பதிலுக்காக காத்திருக்கும் அந்நாள்

பரிசுகள் வாங்கிட பலதினங்கள் யோசித்து
பதில் ஏதும் தேரியாமல், பார்த்ததும் புடித்து போன பொம்மை ஒன்றை
கைகளில் வைத்து அவளுக்காக காத்திருக்கும் ஒருநாள்

அழகு அழகை கவிதை தோன்றி அதை சொல்லிடும் போது
பிள்ளை வரக்கூடாது என்று கடவுளை வேண்டி
காலை பொழுதை ஆரம்பித்த அந்த நாள்

அவன் இன்றாவது என்னிடம் சொல்லவேண்டும் என்று அவள் சாமிக்கு
நெய் வாங்கி விளக்கிட்டு வேலைக்கு புறப்பட்ட புது நாள்

கண்ணாடிக்கு மட்டும் காதல் சொல்ல தெரிந்து இருந்தால் ஆமாம்
"நானும் உன்னை காதலிக்குறேன்" என்று ஒத்து கொண்டு இருக்கும்
அந்த காலை பொழுதை அதனுடன் அவன் ஒத்திகை பார்க்க
செலவு செய்த அந்த பொண்ணான நாள்

"பிப்ரவரி 14" மட்டுமே

காதலர் தின வாழ்த்துக்கள் !!!
Please Post Your Comment

காலைப்பொழுது - kaalaippoluthu

kerala
எண்ணங்களில் காதல் நெருப்பேற்றி
கனவுகளில் எப்போதும் காலைப்பொழுது
அவள் உதடுகளின் ஒர புன்னகையால்
அவன் உறக்கம் இன்னும் கலையாத காலைப்பொழுது
எண்ணங்களில் காதல் நெருப்பேற்றியவள்
இன்று அவன் கன்னங்களை ஈரப்படுத்திய காலைப்பொழுது
"காதல் நெருப்பை அனையாமல் குளிர் காயும் கோடை நிலவு அவள் முகம்"
அதை பார்க்க
எப்போதும் எங்கும்
அவன் காலைப்பொழுது

அவன் காலைப்பொழுதில் இன்னும் பல நிகழ்வுகள் வாசிக்க

காவலன் ஆகிவிட்டேன்

Please Post Your Comment

மழைத்துளி-malaiththuli

malaiththuli
பறவையாய் பறக்கும் அவன் இதயம் தொட்டு விட துடிக்கும் வானம் நீதானடி
நீலவானம் காணும் கனவில் வரும் நட்சத்திரங்கள் உன் புன்னகைதானடி
ஓடி விளையாடும் மேகம் அது விட்டு செல்லும் மழைத்துளியாக, ஆனால்
அவள் நாளை பார்க்கலாம் என்று சொல்லி செல்லும் வேலையில்
அவன் இதயத்தில் இன்று "மழைத்துளி"

மேலும் இதயத்தில் மழைத்துளி பார்க்க வேண்டுமா

சாரல்

கலகம்Please Post Your Comment

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - alanganallur jallikattu

alanganallur jallikattu
ஜல்லிக்கட்டு காளையடி என் நெஞ்சம்
அவள் தாவணி பார்த்து தினம் தினம் அவன் இதயம் கொஞ்சும்
துள்ளி வரும் காளை இவனை
காதல் கயிறு கொண்டு அடக்க துனிந்தால்
அவள் புன்னகை கடிவாளம் அவன் இதயத்தில் கட்டியதால்
இன்று புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை
அதனால் கனவில் கடிதம் எழுதினேன்
"காதலே தூக்கம் வர ஒரு தாலாட்டு பாடு"

தாலாட்டு கேட்க அஞ்சாத கவி மகன் அவன் : அஞ்சாதே பாருங்க

Please Post Your Comment

கேட்டேன்-ketten


ketten

சாயங்கள் பூசாத சின்ன உதடுகளில்
எப்போதும் பெரிய புன்னகை கேட்டேன்
கண்ணீர் சிந்தா கண்களில்
எப்போதும் காதல் சிந்த கேட்டேன்
கோபம் வந்து கிள்ளி விளையாடும் கை விரல்கள்
எப்போதும் என் கன்னங்கள் கிள்ள கேட்டேன்

இன்னும் சில கேட்க ஆசை, ஆனால்

தொலைத்தேன்


தொலைந்த இதயம் எப்படி கேட்கும் Please Post Your Comment

இதய காத்தாடி - idhaya kaaththadi

idhaya kaaththadi
காத்தாடியாக பறக்கும் என் இதயம் உன் புன்னகை காற்று வீசியதால்
காதல் என்னும் கயறு கட்டியதால் கவலையின்றி பறக்கிறேன்
காதல் கயிற்றை கட்டியது அவள் என்பதால் இன்னும் உயர பறக்கிறேன்
இன்று புன்னகை இல்லை அவள் முகத்தில் அதனால்
இதய காத்தாடி கணம் கொண்டு அவள் காலடியில்

இன்று அவள் காலடியில் அவன் பொக்கிஷமாக.
பொக்கிஷம் பார்க்க வேண்டுமா பொக்கிஷம்

Please Post Your Comment

உயிர் மூச்சே நீ தான்-uir muchche nee thaan

uir muchche nee thaan
நீல வானம் என்ற பாலை வானத்தில் ஒரு நடை பயணம்
நிற்காத மேகங்களுடன் ஒரு நிஜ பயணம்
நிலவு அவளுடன் காற்றாக எங்கும் கலந்து போனேன்
அவள் சுவாசிக்கும் உயிர் மூச்சே அவன் சுவாச காற்றானது

Please Post Your Comment

முத்த போர்வை - muththa porvai

muththa porvai
முத்தப்போர்வை போத்தி கொண்ட காரணத்தால்
இதயத்தில் குளிர் இல்லை
இதழ்கள் மட்டும் குளிரில் நடுங்கி நின்றது இப்போது

Please Post Your Comment

அழகிய தமிழ் மகன்- alagiya tamil magan

alagiya tamil magan
சீட்டு கட்டாக சிதைந்த இதயத்தை சேர்க்க வந்த காதல் ராணி
சீட்டின் நம்பர்கள் சேர்ந்தால் ஜெய்த்து விடுவேன்
இன்று உன் நியாபகங்கள் சேர்ந்ததால் சிக்கி கொண்டேன்

காதல் நினைவால் "திருப்பாச்சி" செல்ல வேண்டிய நான்
இன்று "சிவகாசி"யில் நிற்கின்றேன்

அவன் "போக்கிரி" இதயத்தை காதல் கொண்டு களவாடி சென்ற காதலி இப்போதும் அவனுக்கு "ப்ரியமானவளே"

"மதுர" மாமனுக்கு மனசு எல்லாம் இவளாக இருந்தாலும்
கனவில் தனிமையில் சந்திப்பது மட்டுமே எப்போதும் சுகம்.

விஜய் நடித்த படங்களின் பெயர்களை வைத்து முதல் கவிதை.

முத்தக்கவிதை படிக்க வேண்டுமா, இதை பாருங்கள் : முத்த கவிதை
Loading the player...

Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

Please Post Your Comment

நட்ச்சத்திரம் - natchchathiram

natchchathiram
நிலவு அவள் ஒளி வாங்கி என் உயிர் என்னும் ஒளி ஏற்றினேன்
நிலவின் அழகை பக்கத்தில் இருந்து எப்போதும் ரசிக்கும் செல்லப்பிள்ளை
உடைகள் எனக்கு இல்லை ,
அதை என்னி நான் உறங்காமல் இருந்தது இல்லை
நிலவே ஒப்புக்கு கொண்டு பின் சொன்ன வார்த்தை
"என் அழகே அவளுக்கு நான் அவளுக்கு அருகில் இருப்பது தான்"

நட்ச்சத்திரம் காதல் செய்யும் அழகை பார்க்க : காதல் செய்யும் அழகை

Please Post Your Comment

படம் ஓடுது-padam oduthu

padam oduthu
சிறுத்தையாக வரும் என் கோவத்தை எல்லாம் ஏன்
உன் சில்வண்டு பார்வையால் சேத படுத்துகிறாய்
அவன் இதயத்தில் ஏற்படும் குளிர் நடுக்கத்திற்கு காரணம்
அவள் காதல் சிந்தும் புன்னகை தானோ
எப்போதும் அனையாத காதல் நெருப்பு அவன் இதயத்தில்
இன்று அவள் சொன்ன சின்ன உண்மையால்

உண்மை : "நானும் உன்னை காதலிக்குறேன்"

உண்மை எப்போதும் மெதுவாகத்தான் தெரிய வரும்.
அவன் உள்ளத்தில் இன்று உண்மை படம் ஓடுது.
அவள் அந்த படத்தை பார்த்து விட்டால் . நீங்க பாக்க தயாரா ?

நீயா நானா பார்க்க : நீயா நானா

Please Post Your Comment

காகித இதயம் - kaakitha idhayam

 kaakitha idhayam
கண்களால் காதல் சொல்லி
கைகளால் அதை உறுதிபடுத்தி என் காதை கிள்ளும் காதலி
அவன் காதல் பாடல் எழுத காத்திருக்கும் அவள் காகித இதயம்
இதயத்தில் எழுதினால் வலிக்கும் என்று இப்போது
அவள் விழிகளில் கவிதை எழுத ஆரம்பித்து
முற்றுப்புள்ளி வைக்க காத்து கொண்டு இருக்கிறேன் என் கனவில்

Please Post Your Comment

சுகமான உறக்கம் - sugamana urakkam

 sugamana urakkam
உன் முகம் பார்க்காத நாளெல்லாம் அமாவாசை இரவாகி போனது
அவள் கண் விழிகளில் இல்லாத போதையால்
அவன் கவிதைகளில் எழுத்துப்பிழை கூடி போனது

புன்னகைத்து பேசாத மாலை பொழுதும்
அவளுடன் சண்டை போடாத இரவும் இல்லாமல் போனது

அவனுக்கு இதயத்தில் காதல் விதை போட்டதால்
இன்று அவளின் நினைவு என்னும் நிழலில் ஒரு சுகமான உறக்கம்

I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free