Posts

Showing posts from December, 2010

சாதனை - sathanai

Image
2011 மணி நேரம் பேசலாமா
2011 குறும்பு சண்டை போடலாமா
2011 முத்தங்கள் கேட்கலாமா
2011 நாட்கள் காத்திருக்கலாமா

2011 மணி நேரம் காலையில் அவளுடன் நடைபயணம்
2011 முறை "உன்னை காதல் செய்கிறேன்" என்று சொல்லாமா
2011 கவிதைகள் அவளை பற்றி மட்டும் எழுதலாமா
2011 SMS அவளுக்கு மட்டும் அனுப்பலாமா
2011 அவளுக்கு கதை சொல்லி தூங்க வைக்கலாமா

வேண்டாம் வேண்டாம்
2011 வருடங்கள் அவளுடன் வாழ்ந்தால் போதும்.

I started writing in new social blogging platform. http://sozialpapier.com/ . Catch me, if you canபுது வருஷம் - puthu varusam

Image
புது வருசத்தின் முதல் நாள்
புது கனவு
புது நினைவு
புது உறவு
புது கனிவு
புது உணர்வு
எப்போதும் புதிதாய் இருக்கும் அவள் காதல். Loading the player...
Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

நான் மகான் அல்ல - Naan Mahaan Alla

Image
காலை பனித்துளி களையும் முன் எழுந்து பார்த்தல் அவள் முகம்
ஆசை சிந்தும் அதே கண்கள்

அதிகமாய் எப்போதும் பேசும் அதே உதடுகள்
என் மூச்சை இருந்துவிட துடிக்கும் அவள் சுவாசம்

ஆசையை அதிகம் தட்டிகொடுத்த அதே கன்னங்கள்
என் கவிதை வரிகளை எப்போதும் கேட்க ஆசை கொள்ளும் அதே செவிகள்

அட எது என்ன
"நான் இன்னும் கண்கள் மூடி என் படுக்கையில்"

அலைபாயுதே - alaipaiuthey

Image
பொங்கி வரும் அலை போல அவன் காதலை போல அதிகம் ஆர்வம் கொண்டது,
அலை எப்படியும் தன்னை சேர்ந்து விடும் என்று அமைதி கொள்ளும் கடற்கரை எப்போதும் பொறுமை அதிகம் கொண்டது,
அலை எப்போதுமாக அவன் ,
கடற்கரை எப்போதுமாக அவள் ,
அவள்மீது கொண்ட காதல் ஆர்வத்தால் எப்போதும் என் இதயத்தில் அலைபாயுதே.....

நீயா நானா-neeya naana

Image
இதயத்தில் இருக்கும் அவளுடன் அதிகம் பேசி பேசி
இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு "நீயா நானா" நிகழ்ச்சி என் தொலைகாட்சியில் பார்க்கவில்லை
அதற்க்கு பதிலாக என் இதய மேடையில் "நீயா நானா" நடக்கிறது

காவலன் ஆகிவிட்டேன் - kaavalan aagivitten

Image
முழுமையான இருள் கொண்ட காதல் காட்டில் தொலைந்த என் இதயத்தை
இன்று அவள் புன்னகையில் தேடி பார்த்தேன் ,
பாலைவன பயணமாக நெடும் தூரம் நடந்துவிட்டேன்
அவள் காதல் தந்தாள் களைப்பாறலாம் என்று நெடுநேரம் காத்திருந்தேன் ,
உதட்டு சாயங்கள் பூசாத அழகை பார்த்து
எப்போதும் நான் உறை பனியாக எழுந்து நின்றேன் ,
காதல் பாசை பேசி கன்னடித்ததால்
கானாமல் போன இதயத்தை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன் ,
கல்லூரி சென்று படிக்கும் என்னை
அவள் காதல் கொண்டு இதயத்தை இடித்த காரணத்தால்
இன்று என் இதயத்தை பாதுகாக்கும் "காவலன்" ஆகிவிட்டேன்

புதிதாய் பிறந்தான்-puthithai piranthan

Image
அவள் புன்னகை பார்த்த நாள்
அவள் காதல் சொல்லாமல் அமைதியாக சென்ற அந்த நாள்
அவன் அவளுடன் பேசாத மறுநாள்
அவன் காதல் சொல்லி அவள் ஏற்றுகொண்ட இந்த நாள்
அவன் "புதிதாய் பிறந்தான்".

காதல் செய்யும் அழகை - kathal seiium alagai

Image
என் நேரத்தை எல்லாம் விழுங்கி நின்று சுற்றி கொள்ளும் கடிகாரம் பார்க்கட்டும்,
வெறுமை மட்டும் எப்போதும் கொண்ட வானத்தில்,
ஆடைகள் இல்ல பெண்மகள் நிலவு அவள் பார்க்கட்டும்,
தானே சுற்றி கொள்ளும் தனிமைக்கு சொந்தக்காரன்,
என குளுமைக்கும் சொந்தக்காரன் இந்த மின்விசிறி பார்க்கட்டும்,
இவன் "காதல் செய்யும் அழகை"

பொக்கிஷம்- pokkisam

Image
சும்மாவா இருக்கிறன் இந்த சுகந்திர பறவை,
எல்லோரையும் நனைக்கும் நல்ல குறும்பன்,
ஜலதோஷம் தந்து செல்லும் ஜாலி நண்பன்,
காய்ச்சலை விட்டு செல்லும் என் அருமை காதலி
மனதிற்கு அல்ல உடம்பிற்கு,
கவிதைகளை எழுத சொல்லும் கார்மேக துணைவன்
சில வண்டுகளும் சில கொசுக்களும் அவனின் பொக்கிஷங்கள்
எப்போதும் என் கத்தில் கேட்கும் இவன் வரும் சத்தம் "சோ" என

காதல் பேருந்து-kathal perunthu

Image
இரவின் நிலவு அது தேய்ந்தாலும்,
அவள் காதல் மட்டும் ஓயாதே
கனவில் காதல் சிந்தும் அவள் பார்வை
பார்க்காமல் இந்த கண்களும் மூடாதே
அவள் இதய முகவரி தேடி
இன்று அவள் புன்னகைள் தொலைந்த சிறுவன்
காதல் பேருந்தில் ஏற
அவள் இதய நிறுத்தத்தில் காத்திருக்கிறான்

அஞ்சாதே - anjathey

Image
காதல் வரும் வேலையில்
களவி வரும் அஞ்சாதே
அவள் கோவம் கொண்டு பேசும் போது
பிரிவு உன்னை தொடும் அஞ்சாதே
காதல் வந்த பின்னாலே
பொய்களும் உன் உதடோடு வரும் அஞ்சாதே
அவள் மௌனம் மட்டும் பார்த்து விட்டு
காதல் பயம் கொண்டு அஞ்சாதே
அவள் இதயத்தில் கலந்த பின்னும்
காதல் சொல்ல என்றும் "அஞ்சவே அஞ்சாதே"

பேச்சு,மூச்சு - pechchu moochu

Image
விளையாட்டு குழந்தையின் வேடிக்கை பேச்சா
தாய்மை அடைந்த பின் அவள் விட்ட பெரும் மூச்சா
இந்த காதல் இப்போது அவனிடம்
சிலசமயம் பேச்சாகவும்
எப்போதும் அவன் அவளுக்காக விடும் மூச்சாகவும் Loading the player...
Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

காதல் சொந்தம் - kathal sontham

Image
முதுமை கொண்டாலும் முனுமுனுத்து கொண்டே இருக்கும்
உதடுகளுக்கு இந்த பேச்சின் மீது இவளுக்கு எப்போதும் காதல்

சகல வசதிகள் இருந்தும்
அவன் கால் தடுமாறும் வேலையில்
கைகளில் இருக்கும் கைதடி மீது இவனுக்கு எப்போதும் காதல்

அவள் பேசி விட்ட போன பின்னும்
அதே நினைவில் வாழும் அவன் இதயம் மட்டும்
சொல்லும்
"எனக்கு எப்போதும் இவள காதல் மட்டும் சொந்தம்"

Loading the player...
Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - ShortfundlyI started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can

பகல் நிலவு - pagal nilavu

Image
பகல் பொழுதில் பிறை நிலவு ,
காற்றில் ஆடும் துப்பட்டாவில் மறைந்திருக்கும் அவள் முகம். Loading the player...
Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

மன்மதன் அம்பு-manmathan ambu

Image
மன்மதன் விட்ட அம்பால் மயங்கி கிடக்குது நெஞ்சம்
அவள் காதல் மூச்சு தந்தாள் எழுந்து நிற்கும் கொஞ்சம்

அவளை கானாத நாள் எல்லாம் அவன் கண்ணில் கனமழை மிஞ்சும்
தூங்கா இரவுகளும் கருகிவிட்ட சிகரட் துண்டுகளும் தான் இதன் விலையாகும்

காதல் பானம்-kathal paanam

Image
அவள் இதயத்தில் கவிதைகள் எழுதி கலைத்து விட்ட காரணத்தால்
தெம்பாக இப்போது காதல் பானம் குடிக்கின்றேன்

காதல் பானம் தலைக்கு ஏறிவிட்ட நாட்கள் எல்லாம்
இவளை காண வேண்டும் என்று துடிக்கின்றேன்

காதல் ஈரம் கொண்ட கால்களுடன்,
இன்று அவளுடன் ஒரு நடை பயணம்
பயணங்கள் புதுமை தான்.
இதை எல்லாம் எண்ணி அவன் இப்போது இருக்கும் தனிமை
பெரும் கொடுமை.

விலை-vilai

Image
வானத்து குளிர் நிலவு என் கண்களில் தென்பட்டுச்சு
நெருப்பு நிலவு இவள் விடும் முச்சு காற்று
என் முதுகு தண்டை விலை பேசுச்சு
இவனும் இவளும் இன்று ஒரு இருசக்கர வாகன பயணத்தில்.....

வெளிச்சம்-velicham

Image
நான் தூரத்தில் இருந்தாலும் என்னை தொடும்
அவள் கொடுத்த "பார்க்கும் முத்தம்"

வெளிச்சம் எனக்கு பிடிக்காமல் போனது
அவளுடன் நான் இருந்த அந்த "இரவு முதல்"

அல்லிப்பூ-allippoo

Image
அல்லிப்பூ என் அருகில் அமர்ந்து இருக்க
நான் அறியவில்லை அதன் வாசம்
அறிந்தது அதன் இதழ் ஈரம் "முத்தங்களில்"

ரசிகன்-rasigan

Image
களவி என்னும் உடல் மறைக்க
இவன் கட்டிக்கொண்ட ஆடை தானோ
"இந்த காதல்"

இவளிடம் பொய் சொல்லிதனோ
காதல் மன்னன் ஆனான்

இவளிடம் காதல் வாங்கி தானே
கவிதை சொல்லி கிடந்தான்

இவள் புன்னகை பார்த்து தானே இவன் பூக்கள் ரசிக்க வந்தான்

சாக்லேட்-chocolate

Image
மழையில் நனைதிட்ட நிலமாக
அழுது அழுது சாக்லேட் வாங்கி விட்ட குழந்தையாக
மீண்டும் கருவறையில் இருந்து பிறந்திட்ட மகனாக 
நடு இரவில் முத்தம் கிடைத்த காதலனாக 
உணர்தான்
"இவள இன்று காதலை ஒப்புக்கொண்டால்"