Posts

விபத்து - vipaththu

Image
காதல் என்னும் விபத்தால் இன்று இவன் இதயத்தில் அறுவை சிகிச்சை, உயிர் போனாலும் இவள் நினைவுகளுடன்  வாழும் இவன் இதயம்  மீண்டும் விபத்துக்களை சந்திக்க

பயணம் - payanam

Image
விழிகளில் இவளை சிறைபிடித்தான்  அந்த குற்றத்திற்கு தான்  இன்று காதல் என்னும் கானகத்தில்  அவள் நினைவுகள் என்னும்  பேருந்தில் ஏறி ஒரு முடிவில்லா பயணம்

அவள் முகம் - aval mugam

Image
கடிகார முள் எல்லாம் இவனை களவாடி கொண்டது சின்ன புன்னகை கேட்கும் இடம் எல்லாம் திரும்பி பார்க்க தோன்றியது செல்போன் குறுஞ்செய்திகள் மட்டும் கொள்ளை கொள்ளையாய் தீர்ந்து போனது இரவு வரும் நேரம்தனை நெஞ்சம் ஏங்கி கேட்க தொடங்கியது இதயம் இவள் வரவேண்டும் என்று அவனை இடிக்க தொடங்கியது தூரத்தில் வருவது அவளாகவே இருக்க மனம் வேண்டி கொண்டது ஆமாம், வரும் வழியில் பார்த்த முகம் அல்ல இவன் வாழ்க்கையில் பார்த்து விட்ட வரம் அவள் முகம் தூரத்தில் அவள் முகம் இல்லை அவள் புன்னகை சொல்லும் வாசம் "அவள் தான்". முடிவு "சந்தோசம்" Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

காதல் பசை - kaathal pasai

Image
ஒற்றை புன்னகையால் உதிர்ந்து விட்ட இதயம்  ஓட்ட வைக்க காதல் பசை வேண்டும்  உறங்காத இரவுகள் தொடர்ந்திட உன் வாய்மொழி வேண்டும்  பொய்கள் இன்னும் சொல்ல நாம் அடிக்கடி  சண்டை இட்டு கொள்ள வேண்டும்  இவன் செல்போன் ஓயாது இருக்க  எப்போதும் உன் குரல் கேட்க வேண்டும்  இவன் வாழ்வின் முடிவே ஆகினும்  அது இவள கைகளால் முடிந்திட வேண்டும்  

நம்பிக்கை முத்தம் - nambikkai muththam

Image
தள்ளாடும் வயதில்  தான் தனி மரம்  ஆகிவிடும் சூழலில் தோல் கொடுக்கும் மகனின்  உட்சன் தலையில் உறுதி குறையாமல்  உண்மை தனியாமல் தாய்  கொடுத்தால் "நம்பிக்கை முத்தம்" Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

வேண்டுதல் முத்தம் - venduthal muththam

Image
நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும்  நிம்மதி வாழ்வு வாழ வேண்டும்  உலகம் இவனை மட்டும் பார்க்க வேண்டும்  என்று எல்லாம் வேண்டி  கடவுளை பார்த்து தந்தான்  "வேண்டுதல் முத்தம்"

ஈர முத்தம் - muththam

Image
காதலனை எண்ணி அவன் கைசேர காத்திருக்கும்  காகிதத்திற்கு தந்தாள்  "ஈர முத்தம்"