Posts

Showing posts from February, 2011

கனவு - kanavu

Image
அவள் கை பிடித்த நாள்  நான் கால் பதித்த முதல் இடம்  "நிலவு" [அவள் மனது]
கவிதை இல்லை  கனவுகள் மட்டும்  அவளை பார்த்த அந்த நாள் முதல் 
வானவில் வண்ணங்கள் மறைந்து போகும் பெண்ணே உன் புன்னகை  என்னில் புதைந்து  போகும்

சொந்தக்காரன் -sonthakkaran

Image
தனிமை அவனை தத்து எடுத்து கொண்டதால் காதலுக்கு இன்று அவன் சொந்தக்காரன் 
அவன் மீசைக்கு சொந்தக்காரி அவள்  அவள் உதடுகளுக்கு சொந்தக்காரன் அவன் Loading the player...
Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

ஒரு இரவு - oru iravu

Image
காதோடு அவள் செய்த குறும்பு  "சத்தம் செய்யாதே முத்தம் செய்"
இமைகள் தூங்கிய போதும் அவன் இதயம் கேட்கும்  "மீண்டும் ஒரு இரவு அவளுடன்"
அவன் இரவில் கேட்ட புது மெல்லிசை  அவள் இதழ் "சிரிப்பு"

I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can Loading the player...
Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

கன்னக்குழி சிரிப்பு- kannakkuli sirippu

Image
இப்போதெல்லாம் அவன் இதய வங்கியில் சேமிப்பு அதிகம், சேமிப்பு அவள் சினுங்கல்கள்
சத்தம் இல்லாத இரவில்  அவன் வெடித்த பட்டாசு "முத்தம்"
அவனுக்கு விழுந்த முதல் தாயம்  "அவள் கன்னக்குழி சிரிப்பு"

காதலை சொல்லவில்லை-kathalai sollavillai

Image
காதல் கொண்ட இதயம் சொல்லவில்லை, பெளவுர்ணமி இரவில்
தூங்கா நிலவவும் சொல்லவில்லை, கனவுகளுக்கு மட்டும்
சொந்தமான இந்த இரவும் சொல்லவில்லை, இந்த கனவின் சொந்தக்காரன் "நினைவு" அவனும் சொல்லவில்லை, நினைவில் எப்போதும்
நின்று கொண்டு இருக்கும் அவளும் சொல்லவில்லை 
"அவள் காதலை".

காதல் கோவில்-kaathal kovil

Image
காதல் கோவிலில் கடவுளாக விற்றிருக்கும் அவள்  அவன் கடவுளை தரிசிக்காத நாலும் இல்லை  தரிசன் இல்லையென்றால் இரவில் தூங்குவதும் இல்லை
கடவுளை கண்டதும் மனதினில் பிரார்த்தனைகள் செய்ய மறப்பதும் இல்லை  கடவுளின் அழகை எப்போதும் ரசிக்காமல் இருந்ததும் இல்லை 
காதல் கொண்ட காரணத்தால்  அவன் எப்போதும் கடவுளை எண்ணி கவிதை கோலங்கள் போடா தவறியதும் இல்லை 
பக்தனின் கவிதை கோலங்கள் ரசித்தவள்  பிரார்த்தனைகள் கண்டு சிரித்தவள் அவன் பொறுமையை கொண்டு பூரித்தவள் 
இதய கருவறையில் இடம் தர மறுப்பது மட்டும்  புரியாமல் , விடை தெரியாமல் , காரணங்கள் விளங்காமல்  காத்திருக்கிறான் பக்தன் அவன்.

காதல் பாடல்-kathal paadal

Image
அழுகின்ற குழந்தைக்கு அம்மாவின் தாலாட்டு பாடல்
கால் கடுக்க காத்திருந்து காதலி அழைக்கும் ரிங் டோன் தான் அவனுக்கு
தாலாட்டு பாடல்

களவி செய்தபின் நிறைந்து இருக்கும் அமைதி ஒரு பாடல்
கல்லூரியில் அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம் இவன் மனதில் கேட்கும்
சோக பாடல்

நடுநிசி இரவில் அவள் SMS கிடைத்தவுடன் அவன் மனதில் காதல் பாடல்
அவள் முகம் பார்க்க நாளை வரை காத்திருக்க வேண்டும் எனும் போது கேட்க
துனியும் "களவி பாடல்"

எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று காலையில் கேட்டான் பக்தி பாடல்
இதயத்தில் காதல் பாடல் படி அவளிடம் காதல் சொல்ல நடந்தான்.

இந்த நாள்
"பிப்ரவரி 14"

காதலர் தின வாழ்த்துக்கள் !!!

விடுதலை-viduthalai

Image
அவள் கண் பார்வையில் பிடி பட்டேன் இன்று காதல் சிறையில் அகப்பட்டேன்  காதல் கைதியாய் அவன் பெற்ற இன்ப தண்டனை  "எப்போதும் அவள் நினைத்து கொண்டே இரு" இந்த ஆயுள் தண்டனை முடிவதற்குள் அவள் இதயத்தை திருடி முடித்த காரணத்தால் தண்டனை முடிந்து இன்று  அவள் காதல் விடுதலை தரும் பெரும் நாள்
"பிப்ரவரி 14"
காதலர் தின வாழ்த்துக்கள் !!!

பிப்ரவரி 14- feb 14

Image
அவள் இதயத்துடன் காதல் தேர்வு எழுதும் நாள்
அவள் ஒற்றை இதயத்திற்கு மட்டும் ஓட்டுப்போட்டு
ஜெய்து விடுவோமா என்று பதிலுக்காக காத்திருக்கும் அந்நாள்

பரிசுகள் வாங்கிட பலதினங்கள் யோசித்து
பதில் ஏதும் தேரியாமல், பார்த்ததும் புடித்து போன பொம்மை ஒன்றை
கைகளில் வைத்து அவளுக்காக காத்திருக்கும் ஒருநாள்

அழகு அழகை கவிதை தோன்றி அதை சொல்லிடும் போது
பிள்ளை வரக்கூடாது என்று கடவுளை வேண்டி
காலை பொழுதை ஆரம்பித்த அந்த நாள்

அவன் இன்றாவது என்னிடம் சொல்லவேண்டும் என்று அவள் சாமிக்கு
நெய் வாங்கி விளக்கிட்டு வேலைக்கு புறப்பட்ட புது நாள்

கண்ணாடிக்கு மட்டும் காதல் சொல்ல தெரிந்து இருந்தால் ஆமாம்
"நானும் உன்னை காதலிக்குறேன்" என்று ஒத்து கொண்டு இருக்கும்
அந்த காலை பொழுதை அதனுடன் அவன் ஒத்திகை பார்க்க
செலவு செய்த அந்த பொண்ணான நாள்

"பிப்ரவரி 14" மட்டுமே

காதலர் தின வாழ்த்துக்கள் !!!




காலைப்பொழுது - kaalaippoluthu

Image
எண்ணங்களில் காதல் நெருப்பேற்றி
கனவுகளில் எப்போதும் காலைப்பொழுது
அவள் உதடுகளின் ஒர புன்னகையால்
அவன் உறக்கம் இன்னும் கலையாத காலைப்பொழுது
எண்ணங்களில் காதல் நெருப்பேற்றியவள்
இன்று அவன் கன்னங்களை ஈரப்படுத்திய காலைப்பொழுது
"காதல் நெருப்பை அனையாமல் குளிர் காயும் கோடை நிலவு அவள் முகம்"
அதை பார்க்க
எப்போதும் எங்கும்
அவன் காலைப்பொழுது

அவன் காலைப்பொழுதில் இன்னும் பல நிகழ்வுகள் வாசிக்க

காவலன் ஆகிவிட்டேன்புதிதாய் பிறந்தான் காதல் செய்யும் அழகை  இவனும் இவளும்
களவாணி