நேரம்-neram

புதியவள் இவள் எனக்காய் பூத்திருந்த நேரம் நடுநிசி இரவில் நிலவின் ஒற்றை விழியும் இவனின் இரட்டை விழியும் தூங்க மறுத்த நேரம் கவிதை எழுதி கலைத்தலும் இவளின் காதலில் எப்போதும் உடைய கனவுகள் கொண்ட நேரம் ஓடும் குருதி நின்றாலும் ஓடும் இவள் நினைவுகள் உறங்கா நேரம் போர்வை போத்தி படுத்தாலும் இதய சுவர் ஏறி எட்டி பார்க்கும் காதல் திருடன் வரும் நேரம் அவளுடன் கனவில் இருந்தான் இவன்.