அவள் முகம் - aval mugam


கடிகார முள் எல்லாம் இவனை களவாடி கொண்டது
சின்ன புன்னகை கேட்கும் இடம் எல்லாம் திரும்பி பார்க்க தோன்றியது

செல்போன் குறுஞ்செய்திகள் மட்டும்
கொள்ளை கொள்ளையாய் தீர்ந்து போனது
இரவு வரும் நேரம்தனை நெஞ்சம் ஏங்கி கேட்க தொடங்கியது

இதயம் இவள் வரவேண்டும் என்று அவனை இடிக்க தொடங்கியது
தூரத்தில் வருவது அவளாகவே இருக்க மனம் வேண்டி கொண்டது

ஆமாம், வரும் வழியில் பார்த்த முகம் அல்ல
இவன் வாழ்க்கையில் பார்த்து விட்ட வரம் அவள் முகம்

தூரத்தில் அவள் முகம் இல்லை
அவள் புன்னகை சொல்லும் வாசம்

"அவள் தான்".
முடிவு "சந்தோசம்"
Loading the player...

Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

Please Post Your Comment

காதல் பசை - kaathal pasai

ஒற்றை புன்னகையால் உதிர்ந்து விட்ட இதயம் 
ஓட்ட வைக்க காதல் பசை வேண்டும் 

உறங்காத இரவுகள் தொடர்ந்திட
உன் வாய்மொழி வேண்டும் 

பொய்கள் இன்னும் சொல்ல
நாம் அடிக்கடி  சண்டை இட்டு கொள்ள வேண்டும் 

இவன் செல்போன் ஓயாது இருக்க 
எப்போதும் உன் குரல் கேட்க வேண்டும் 

இவன் வாழ்வின் முடிவே ஆகினும் 
அது இவள கைகளால் முடிந்திட வேண்டும்  

Please Post Your Comment

நம்பிக்கை முத்தம் - nambikkai muththam

தள்ளாடும் வயதில் 
தான் தனி மரம் 
ஆகிவிடும் சூழலில்

தோல் கொடுக்கும் மகனின் 
உட்சன் தலையில்
உறுதி குறையாமல் 
உண்மை தனியாமல்

தாய்  கொடுத்தால்
"நம்பிக்கை முத்தம்"
Loading the player...

Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Please Post Your Comment

வேண்டுதல் முத்தம் - venduthal muththam

நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் 
நிம்மதி வாழ்வு வாழ வேண்டும் 
உலகம் இவனை மட்டும் பார்க்க வேண்டும் 
என்று எல்லாம் வேண்டி 
கடவுளை பார்த்து தந்தான் 
"வேண்டுதல் முத்தம்"

Please Post Your Comment

ஈர முத்தம் - muththam

காதலனை எண்ணி அவன் கைசேர காத்திருக்கும் 
காகிதத்திற்கு தந்தாள் 
"ஈர முத்தம்"


Please Post Your Comment

எது வரை - ethu varai

மல்லிகை வாசம் அது வாடும் வரை 
கவிதை வாழ்வு  அதை ரசிக்கும் வரை 
இரவின் வாழ்வு அது விடியும் வரை 
நிலவின் வாழ்வு அது தேயும் வரை 
அவள் நினைவின் வாழ்வு அது 
அவன் மண்ணில் புதைவும் வரை 
Loading the player...

Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Please Post Your Comment

பூங்கா - poonga

பூங்காவில் பூக்கள் எல்லாம் மலர்ந்து நின்று இருக்கும் 
என்று எண்ணி தேன் எடுக்கும் தேனிக்கள்
இன்று குழம்பி நின்றதாம் 
பூ அவள் பூங்காவில் "நடைப்பயிற்சி" செய்த காரணத்தால் 

Loading the player...

Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Please Post Your Comment

ஓட்டம் - ottam

காதல் பயணத்தில் தொடர்ந்து வரும் நிலவாக
அவள் நியாபகங்கள் 
நிலவு அதனை ரசிக்கின்றான் 
அவள் நியாபகன்களால் துடிக்கின்றான் 
அவள் புன்னகைக்கும் முகம் 
பார்த்த பின் தான் அவன் இதயத்தில் ரத்த ஓட்டம் 
அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம் 
அவன் கால்கள் தானே எடுக்கும் ஓட்டம்
Loading the player...

Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free